அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்ற நாடுகள்
எதிர்வரும் 2026ம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.
அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலும் மொத்தமாக 20 நாடுகள் பங்கேற்க உள்ளன.
தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டித் தெடரில் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுக்கொண்ட அணிகள், உலக தர வரிசையில் முன்னணி வகிக்கும் நாடுகள் மற்றும் போட்டித் தொடரை ஏற்பாடு செய்யும் நாடுகள் என்ற அடிப்படையில் 12 நாடுகள் தகுதி பெற்றுக் கொண்டுள்ளன.
ஏனைய 8 நாடுகளும் தகுதிகாண் போட்டிகள் மூலமும் தர வரிசை மூலமும் தெரிவு செய்யப்பட உள்ளன. 2026ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.
தர வரிசையின் அடிப்படையில் தெரிவு
இதன்படி இலங்கை இந்திய அணிகள் அடுத்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக ரி20 தர வரிசையில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தர வரிசையின் அடிப்படையில் தெரிவாகியுள்ளன.
இதன்படி, இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய 12 அணிகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்காது உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |