ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியவர் கைது: பொதியில் சிக்கிய பல மில்லியன் பொருட்கள்
டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இலங்கையை சேர்ந்த விமான பயணி ஒருவர் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பொருட்களை பொதியில் மறைத்து கொண்டுவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச்செல்ல முற்பட்ட போது விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரது பொதிகளில் வெள்ளை காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த புதிய “ஆப்பிள்” மொபைல் போன்கள், மடிக்கணினிகள், “ஆப்பிள்” மேக் வைஃபை சாதனங்கள் மற்றும் தங்க நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் பதக்கங்கள் ஆகியவற்றையும் கண்டுபிடித்ததாக விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 மில்லியன் ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வெல்லம்பிட்டியை சேர்ந்த 35 வயதுடைய தொழிலதிபர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.