எந்தச் சூழ்நிலையிலும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை: சிறீதரன் சூளுரை
எத்தனை இடர்கள் வந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியட்ட அவர்,
என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது.
அரசியல் பயணம்
தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியல் பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும்.

கட்சிக்கு எதிராகவும் தெரிவு செய்யப்பட்ட தலைவராக நான் செயற்பட முடியாதவாறும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பலர், கட்சியைவிட்டு நான் வெளியேறியிருக்கலாம் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
அதேவேளை, என்னைக் கட்சியைவிட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறுகின்றார்கள். என்னையும்,
எனது தலைமைத்துவத்தையும் நேசிக்கின்ற - விசுவாசிக்கின்ற எனது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan