ஆபத்தான நிலையில் நாட்டை விட்டு ஓடும் தமிழ் இளைஞர்கள்
இலங்கை மண்ணில் வாழமுடியாத நிர்பந்தத்திற்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர்கள் ஆபத்தான நிலையில் நாட்டை விட்டு ஓடுவதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற (06.03.2024) பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
உயிருடன் வீட்டுக்கு வர ஆசைப்பட்ட சாந்தனின் உயிரற்ற உடல் நாட்டிற்கு வந்தமையானது மக்கள் மனங்களிலே மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய அரசின் மீது அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.
இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், இந்தியப்பிரதமர் மற்றும் இலங்கை அரசிடம் கேட்கிறோம்.
இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை ஆகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவிக் கொண்ட சாந்தன்னுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளை செய்து கொள்கிறேன்.
மேலும், சாந்தனின் வருகைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அந்த முயற்சிகள் தோல்வி கண்டிருந்தது. " என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |