மன்னாரில் மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ள சிறீதரன் எம்.பி
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடி வருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை கொண்டு செல்வதற்கான முயற்சி நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
மக்கள் மீது தாக்குதல்
இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் மூவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களின் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 22 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan