திருமண நிகழ்வில் நாமலுக்கு பயத்தை காட்டிய சம்பவம் - தம்பியுடன் ஓடிச்சென்ற தருணம்
பிலியந்தலை, பொல்கொட பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்பாராத அனுபவத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளார்.
நாமல் தனியாக நிகழ்விற்கு வருகைத்தராமல் தனது சகோதரன் யோஷிதா ராஜபக்சவையும் அழைத்து வந்துள்ளார்.
இதன் போது நீதிபதி ஒருவர் அமர்ந்திருந்த மேசை ஒன்றில் நாமல் மற்றும் யோஷிதவுக்கு கதிரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தப்பிச் சென்ற நாமல்
எனினும் நாமல் உடனடியாக அங்கு அமர மறுத்துவிட்டார். நீதிபதியுடன் அமர்வருது பொருத்தமானதல்ல என நாமல் விளக்கியுள்ளர்.

எனவே நாமல் மற்றும் யோஷித வேறு இடத்திற்குச் சென்று அமர்ந்தனர். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று ஒருவருக்கொருவர் உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் நாமல் எழுந்து சென்று யாருடனும் பேசவில்லை. எனினும், அனைவரும் நாமலின் அருகில் சென்று நாமலுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
நாமலின் முடிவு
நீதிபதி அமர்ந்திருந்த மேசையில் அமர்வதற்கு பதிலாக நாமல் வேறொரு மேசைக்குச் சென்று அமர்ந்திருப்பதை பலர் கவனித்தனர், அவர்களில் பலர் நாமல் மிகவும் சரியான முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளனர்.

வழக்குகள் உள்ளவர்கள் நீதிபதிகளுடன் ஒன்றாக அமர்வது நல்லதல்ல, என நாமல் அவர்களிடம் லேசான புன்னகையுடன் கூறியுள்ளார்.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri