கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ்ஸை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (13.02.2024) கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் நலன்சார்
இந்த சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri