சிறீதரன் விவகாரம் கொழும்பு மைய அரசியலை நடத்துவதா அல்லது தாயக மைய அரசியலை நடத்துவதா என்ற பிரச்சினை
சிறீதரன் விவகாரம் கொழும்பு மைய அரசியலை நடத்துவதா அல்லது தாயக மைய அரசியலை நடத்துவதா என்ற பிரச்சினையே என அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(27.1.2026) நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த ஒருவரை கணக்காளர் நாயகமாக நியமிப்பதற்கு அவர்ஆதரவளித்ததாக ஒரு குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.
அரசியல் அமைப்பு பேரவை
அது தொடர்பில் அவர் பொது வெளியில் எதனையும் கூறவில்லை. அவர் ஆதரவு கொடுத்திருந்தால் உண்மையில் அது தவறு தான். அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலக சொல்லி கேட்பது பொருத்தமில்லை.

ஆனால் அதனை கேட்பவர் யார் எனில் அவர் சுமந்திரன். சுமந்திரன் ஏற்கனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்பட்ட ஒருவர். சுமந்திரன் ஒரு பச்சை இனவாதியாக இருக்கின்றார்.
இந்த விடயத்தில் இராணுவ தளபதிக்கு வாக்களித்திருந்தால் அது தொடர்பான காரணத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
எதிரான கருத்து
உண்மையாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். இனிமேல் அவ்வாறு நடக்காமல் இருப்பதற்குரிய உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.

அது தான் பொருத்தமாக இருக்கும். அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூற வேண்டிய தேவை இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன்.
சிறீதரனுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்வைத்திருந்தார். இதற்கெல்லாம் பின்புலமாக நின்று செயற்ப்பட்டவர் சுமந்திரன் தான் எனத் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam