யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது
அனுமதிப் பத்திரமன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் இன்றையதினம்(26.01.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை
இந்தக் கைது நடவடிக்கையானது இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் வைத்து சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஒரு டிப்பர் தப்பித்து சென்றதாகவும் குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட போதே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த மணலானது ஏனைய பொலிஸ் பிரிவுகளான கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளையும் தாண்டி வந்த நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri