பாதாள உலக முக்கிய புள்ளியின் சகா பயன்படுத்திய அதிசொகுசு வாகனம் பொத்துவில் பகுதியில் மீட்பு

Ampara Sri Lanka Sri Lanka Police Investigation
By Farook Sihan Feb 26, 2023 12:39 AM GMT
Report

பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதிசொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த சந்தேகநபர் பின்னர் இந்தியாவிற்கு தப்பி செல்லும் வேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் வழங்கிய தகவல் ஒன்றிற்கமைய பொத்துவில் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் நேற்று குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைதான சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது 3 ஆவது மனைவி என கூறப்படும் பெண்ணின் வீட்டில் இருந்தே மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பனவற்றை பொலிஸ் மோப்பநாய் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பிற்கு விசேட அதிரடிப்படையின் உதவியும் பெறப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதாள உலக முக்கிய புள்ளியின் சகா பயன்படுத்திய அதிசொகுசு வாகனம் பொத்துவில் பகுதியில் மீட்பு | Srialnka Ultra Luxury Car Recovery Package Area

விசாரணையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்

மேலும் மீட்கப்பட்ட கார் பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகாக்கள் பயணித்த நிலையில் வேறு ஒரு குழுவினரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு தப்பிச்சென்று பொத்துவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், அத்துடன் வெளிமாவட்டத்தில் ஏதாவது குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட மூவர் வெள்ளிக்கிழமை (23)  கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாதாள உலக முக்கிய புள்ளியின் சகா பயன்படுத்திய அதிசொகுசு வாகனம் பொத்துவில் பகுதியில் மீட்பு | Srialnka Ultra Luxury Car Recovery Package Area

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஏற்கனவே சம்பவ தினமன்று 2 பேரும் மற்றுமொருவர் விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மற்றுமொரு சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமைமறைவாகியுள்ளதுடன், சந்தேகநபரை தொடர்ச்சியாக பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த சந்தேகநபர் தனியார் காப்புறுதி அலுவலகம் ஒன்றில் பணியாற்றுவதாக கூறி வாகனங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளதுடன் இவ்வாறான போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை

மேலதிக விசாரணைகளை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில்,கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள காரின் பெறுமதி சுமார் 1 அரைக்கோடி ரூபா பெறுமதி எனவும் கார் தற்போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை அடையாளம் காணப்பட்ட காரின் உரிமையாளரை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US