உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்! வழக்கு விசாரணைகள் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தின் நிரந்தர மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் 17வது சந்தேகநபரான யாசின்பாவா அப்துல் ரவூப் என்பவர் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதனையடுத்து ஏனைய 24 சந்தேகநபர்கள் மீதான 23, 570 குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் இன்று ஆரம்பமானது.வழக்கை விரைந்து விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நீதிமன்றம், அடுத்த தவணை விசாரணையை மார்ச் மாதம் 31ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
