வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்! (VIDEO)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்., வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய
வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கிரிஜைகள், வசந்தமண்டபப் பூஜை என்பன இடம்பெற்று காலை 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம் வந்தார்.
திருவிழாக்கள்
சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ஆம் திகதியும், தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும், சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதி காலையும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 2ஆம் திகதி வெண்ணெய்த் திருவிழாவும், 3ஆம் திகதி துகில் திருவிழாவும், 4ஆம் திகதி பாம்புத் திருவிழாவும், 5ஆம் திகதி கம்சன் போர்த்திருவிழாவும், 7ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 8ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 9ஆம் திகதி சமுத்திரத் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.
ஒக்டோபர் 10ஆம் திகதி கேணித் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
பெருந்திருவிழாவை சுகாதார விதிகளின்படி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.