சிறீதரன் எம்பியை புலனாய்வு பிரிவில் சிக்க வைத்த தமிழ் எம்பி! அம்பலமாகும் இரகசியம்..
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவிக்கப்படாத சொத்துக்களை வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறீதரன் அதன் உண்மைதன்மைகளை தெளிவுப்படுத்தியுள்ளார்.
கடந்த 10 வருடங்களாக சொத்துக்குவிப்புக்களை வெளிபடுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,




