மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி மீது கொடூர தாக்குதல்! பதைபதைக்க வைக்கும் காணொளி
அநுராதபுரத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து சாரதி மீது ஹந்தானை பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான சாரதி
அநுராதபுரத்தில் இருந்து ஹந்தானை மலைத் தொடரை பார்வையிடச் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி கண்டியை நோக்கி திரும்பி வரும் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திரும்பி வரும் வழியில் எதிர்த் திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் பேருந்து மோதுண்டுள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் பேருந்தின் சாரதி மீது பொல்லுகளைக் கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பேருந்தில் பயணித்த பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த போதிலும் தாக்குதல்தாரிகள் அவர்களுடன் முரண்பட்டதுடன், தாக்குதலை மேலும் தொடர்ந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்டபோது, பாடசாலை மாணவர்களும் இருந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான பேருந்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணொளியை காண இங்கே அழுத்தவும்..
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri