ஒரே தடவையில் ஏற்றக்கூடிய தடுப்பூசி குறித்து இலங்கை கவனம்
கோவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒரே தடவையில் ஏற்றக்கூடிய தடுப்பூசி ஒன்று குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தினால் இந்த வகை தடுப்பூசி ஒன்றுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தினால் இந்த ஒரே தடவையில் ஏற்றக்கூடிய தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது இலங்கையில் பயன்படுத்தப்படும் கொவெக்சீன் போன்ற தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு தடவைகள் ஏற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வகை தடுப்பூசி செலவு குறைந்தது என்பதுடன், அதிகுளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்த வேண்டியதில்லை எனவும், சாதாரண குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இதுவரையில் இந்த தடுப்பூசிக்கான அனுமதி அதிகாரபூர்வமாக கோரப்படவில்லை என தேசிய ஒளெடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam