ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியதாக தெரியவருகிறது.
ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சலுகைகளை பெற்றுக் கொண்டு இலங்கை வந்த குழு
இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது.
இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் எதிர்வரும் இரண்டு நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
