சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரிகளாகும் இலங்கையர்கள்!
இலங்கை உட்பட மேலும் ஐந்து நாடுகளில் இருந்து, சிங்கப்பூர், துணை பொலிஸ் அதிகாரிகளை நியமிக்கவுள்ளது.
சிங்கப்பூரின் உள்துறை இரண்டாவது அமைச்சர் ஜோசபின் தியோ, இதனை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பாதுகாப்பு சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, துணை பொலிஸ் படைகள், போதுமான துணை பொலிஸ் அதிகாரிகள் இல்லாமல், சவால்களை எதிர்கொள்கின்றன.
துணை பொலிஸ்
முன்னர், சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் மற்றும் தைவானியர்கள் மட்டுமே, இந்த துணை பொலிஸ் துறைக்கு உள்ளீர்க்கப்பட்டனர்.
எனினும், சிங்கப்பூரின் மனிதவளத் தேவைகள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த துறைக்குள் வேறு நாட்டினரும் உள்வாங்கப்படுகின்றனர்.
இதன்படி, இலங்கை, மியன்மார், பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து துணை பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், இந்த புதிய அதிகாரிகள் டிசம்பர் 2024 நிலவரப்படி மொத்த துணை பொலிஸ் பணியாளர்களில் சுமார் 3 சதவீதமாக உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |