இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து அணி
ஐசிசி(ICC) செம்பியன்ஸ் டிரொபி தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் "ஏ" பிரிவில் 2ஆவது இடம் பிடித்த நியூசிலாந்தும், "பி" பிரிவில் முதல் இடம் பிடித்த தென்ஆபிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
ரச்சின் ரவீந்திரா
அதன்படி அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா(Rachin Ravindra )ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வில் யங்கால் நீண்ட நேரம் நீடிக்க முடிவில்லை.
நியூசிலாந்துஅணியின் புள்ளிகள் 7.5 ஓவரில் 48 ஓட்டங்களாக இருக்கும்போது 23 பந்தில் 3 பவுண்டரியுடன் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். முதல் 10 ஓவரில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்கள் சேர்த்தது.
ரச்சின் ரவீந்திரா 101 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்ஸ் உடன் 108 ஓட்டங்கள் விளாசி ரபடா பந்தில் ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்சன் அரைசதம்
கேன் வில்லியம்சன் 91 பந்தில் சதம் அடித்தார்.
சதம் அடித்த அவர் 94 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினார்கள்.
37 பந்தில் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் ஆட்டமிழந்தார்.
இவ்வாறான அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்கள் குவித்துள்ளது. கிளென் பிலிப்ஸ் 27 பந்தில் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் நியூசிலாந்து அணி தென்ஆபிரிக்காவுக்கு 363 என்ற இமாலய இலக்காக நிர்ணயித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பெறும் அணி இந்திய அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |