தனுஷ்க குணதிலக்கவின் செலவுகளை ஏற்க முன்வந்துள்ள அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான தொடர்பு இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

செல்வந்தர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம்
தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை பெறும்போது அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நிரந்தர முகவரியை வழங்க வேண்டியிருப்பதால், குணதிலக்கவுக்கு அந்த நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரின் வீட்டின் முகவரி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த வீட்டில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் வழக்கு முடியும் வரை அவரது செலவுகளை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் ஏற்க முன்வந்துள்ளனர்.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan