சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தனுஷ்க இடைநிறுத்தம்
பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சகல விதமான கிரிக்கெட் போட்களிலுமிருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் அமுலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள்
அத்துடன், அவரை எந்த தெரிவின் போதும் கவனத்தில் கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு
அத்துடன் அவரை எந்தத் தேர்வுக்கும் கருத்தில் கொள்ளப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பாலியல் குற்றச்சாட்டில் சிட்னியில் கைதாகியுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
