வாடகை விமானம் மூலம் வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 152 இலங்கையர்கள்
இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 302 இலங்கை ஏதிலிகளில் 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன்படி நேற்று (டிச.27) வியட்நாமின் ஹோசிமின் நகரில் இருந்து வாடகை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்கு அனுப்பப்படும் ஏதிலிகள்
அவர்களின் வாக்குமூலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பதிவு செய்யப்பட உள்ளதாகவும், அவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்களுடன் (MRCC) புலம்பெயர்ந்தோருக்கான மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆனது வியட்நாம் அரசு மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகத்துடன் ஒருங்கிணைந்து உணவு, மருத்துவ உதவி, சுகாதார கருவிகள் மற்றும் அனைத்து புலம்பெயர்ந்தோருக்கு ஆலோசனை ஆதரவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்குவதை உறுதி செய்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு
சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்தல், சிறப்புப் பட்டய விமானம் மூலம் திருப்பி அனுப்புதல், அவர்களது வீடுகளுக்குச் செல்லும் போக்குவரத்து மற்றும் இலங்கையில் விரிவான மறு ஒருங்கிணைப்பு உதவிகள் 600,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
முறையற்ற வழிகளில் எல்லைகளை கடக்க முயற்சிக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புதல் மற்றும் மீண்டும் ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு வழங்கிய தாராள ஆதரவிற்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் ஏதிலிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கை ஏதிலி ஒருவர் உயிரிழப்பு
இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை ஏதிலிகள் மூன்று குழுக்களாக பிரித்து, மூன்று முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
அவர்களில் 152 இலங்கையர்கள் மட்டும் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட இலங்கை ஏதிலிகளில் இரு ஏதிலிகள் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர்.
அவர்களில் யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
