வியட்நாமில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்! நாளை நாடு திரும்புவர்
சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்து கடலில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 303 இலங்கையர்களில் 151 பேர் இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி மியன்மாரில் இருந்து கப்பல் மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு பயணித்த 303 இலங்கையர்கள், நடுக்கடலில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாளை நாடு திரும்புவர்
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 3 தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடன் மீண்டும் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் இருந்து அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.