உக்ரைனில் வாழும் மக்களை விட, இலங்கை வாழ் மக்கள் தற்போது பெரிதும் பாதிப்பட்டுள்ளனர் - இராதாகிருஷ்ணன்
போர் நடைபெறும் உக்ரைனில் வாழும் மக்களைவிட, இலங்கைவாழ் மக்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சி உள்ளது என வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" நாட்டில் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி அதிகரித்துவருவதால் நாளாந்தம் பொருட்களின் விலை உயர்வடைகின்றது. இதனால் நாட்டு மக்கள் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்துவருகின்றனர்.
எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு, போக்குவரத்துறைகூட ஸ்தம்பித்துள்ள நிலை. அதுமட்டுமல்ல சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய பேரவலம்வேறு.
எனினும், நாட்டை மீட்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசு, நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கவில்லை.
அது தொடர்பில் ஆட்சியாளர்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். எனவே, இந்த அரசை விரட்டியடித்தால்தான் நாட்டு மக்களுக்கு தீர்வு கிடைக்கும்.
தேசிய அரசமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கூறவில்லை. மாறாக தேசிய வேலைத்திட்டம் பற்றியே அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டில் குடும்ப ஆட்சியே நிலவுகின்றது. அங்கு பிறரின் கருத்துக்கு இடமில்லை.
அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர். குடும்ப ஆட்சி நடக்கும் சூழ்நிலையில் தேசிய அரசு சாத்தியப்படாது. குடும்பத்தின் திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படும்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமைமா கிடைக்குமா என்பது சந்தேகமே." - என்றார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam