இலங்கையர்கள் ஒவ்வொருவரும் பெற்றுள்ள பெருந்தொகை கடன்: வெளியான தகவல்
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத நிலவரப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கம் பெற்ற மொத்தக் கடன் தொகை 28,094.69 பில்லியன் ரூபா எனவும், இதன்படி தனிநபர் கடன் தொகை 12,65,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் விஞ்ஞான மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மேலும், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அரசு எடுத்த கடன் தொகை ரூ.50,60,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 இல் நாட்டின் தனிநபர் கடன் ஆறு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் (690,000) ரூபாவாகும். 2021 இல் 08 லட்சம் ரூபாவையும் தாண்டியுள்ளதுடன், கடந்த மூன்று ஆண்டுகளில், அந்த தொகை இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
நாட்டின் மொத்தக்கடன்
நாட்டின் மொத்தக்கடனை கருத்தில் கொண்டால் அது 13,031 பில்லியன் ரூபாவாகும். 2020ல் 15,117 பில்லியனாகவும், 2021ல் 17,614 பில்லியனாகவும் வளர்ந்துள்ளதுடன், 2022ல் இது 27,492 பில்லியன் ரூபாவாக வளர்ந்துள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டுக்குள் ஒரு நபருக்காக அரசாங்கம் பெற்றுள்ள கடன் தொகை 5,98,000 என்றும் தெரியவருகின்றது. இது 2020 இல் 690,000 ஆகவும், 2021 இல் 795,000 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் தனி நபர் நிதி நிறுவனங்களிலும் மக்கள் கடன் பெற்றுள்ள நிலையில், மக்கள் சார்பில் அரசு பெற்ற கடன் தொகை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதுதவிர தங்க பொருட்களை அடகு வைக்கும் நிலையும் காணப்பட்டுள்ளதுடன், பலர் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |