அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் (Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை சேர்ந்த 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கை மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
அகதிகளாக தஞ்சமடைந்தோர்
இந்த நிலையில், தலைமன்னாரிலிருந்து கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு குடும்பங்களை சேர்ந்த 6 பேர் படகு மூலம் இன்று அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
இவர்கள் தனுஷ்கோடியை அடுத்துள்ள கம்பிப்பாடு கடற்கரையில் இறங்கியுள்ளனர். குடும்பமொன்று மற்றும் தனிநபர் ஒருவர் உட்பட 6 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு தலைமன்னாரிலிருந்து குறித்த 6 பேரும் படகு மூலம் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இலங்கை தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதேவேளை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்தி: ஆசிக்
அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோருக்கான முக்கிய அறிவித்தல் |