அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள் (Video)
அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 6 பேரை ஹேவர் கிராப்ட் ரோந்து கப்பல் உதவியுடன் மரைன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டம் பறையாளங்குளம் பகுதியிலிருந்து நேற்று (10) இரவு புறப்பட்டு, இன்று (11) காலை சுமார் 5 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, மரைன் பொலிஸார் இவர்களை மீட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணை
விசாரணையின் பின், இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்தைகளுடன் காத்திருக்க நேரிட்டுள்ளது.
இலங்கையின் நிலை காரணமாக பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பற்றிக்கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இதையடுத்து, ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் மண்டப கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், பல மணி நேரம் கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு நின்றதாகவும் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
"நாங்கள் அணிந்திருந்த உடைகளை காண்பித்து அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்தொழிலாளர்களிடம் உதவி கோரினோம்.
இதனையடுத்து, எங்களை இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் பொலிஸார் உரிய நேரத்தில் மீட்டனர்.
கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்” என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக சென்ற இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அசாதாரண சூழ்நிலையுமே இவர்கள் அகதிகளாக தஞ்சம் புகுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மா என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஒரு பக்கம் உயர, மறுபக்கம் அவற்றின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.
மேலும், பல இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை சுமார் 109 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
