டுபாய் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தல்! பெண் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
டுபாய் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளர் என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பெண்ணை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான பாதுகாப்பு சட்டத்தரணி நிரோஷன் சிறிவர்தன, தனது வாடிக்கையாளருக்கு மனித கடத்தல் மோசடியுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்துள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டார்.
தனது வாடிக்கையாளருக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார் என்பதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பித்தார்.
மனித கடத்தல் மோசடி
மனித கடத்தல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபரான, ஆஷா திஸாநாயக்க, தமக்கு எதிராக பயணத்தடையை, பொலிஸ் பெற்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே சரணடைய தீர்மானித்தாக அவர் மேலும் கூறினார்.
அவர் மனித கடத்தலில் ஈடுபட்டதாக ஆதாரம் எதுவும் இல்லை என்றும் சட்டத்தரணி
மேலும் வாதிட்டார்.
வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சந்தேகநபரை
ரூபா 300,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லுமாறு உத்தரவிட்டார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
