இலங்கை மகளிர் அணிக்கு மற்றுமொரு தோல்வி
ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில், இன்று (05) நடைபெற்ற, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிருக்கான 20க்கு 20 உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில், இலங்கை மகளிர் அணி மீண்டும் ஒரு தோல்வியை தழுவியுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலேயே இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் தோல்வி கண்டுள்ளது. இது, உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அடைந்த இரண்டாவது தோல்வியாகும்.
முதல்நாள் ஆட்டம்
ஏற்கனவே, முதல் நாள் ஆட்டத்தின் போது, இலங்கை அணியை பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிகொண்டது.
இந்தநிலையில், இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களை பெற்றது.
மேலும், பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
அதேவேளை, பங்களாதேஸ் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது சார்ஜாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
