உலகக்கிண்ணம் 2024: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இலங்கை மகளிர்
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிருக்கான இருபதுக்கு20 உலக கிண்ண போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியிடம் 31 ஒட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
சார்ஜாவில் நேற்று (03.10.2024) இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 116 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் சார்பாக பாத்திமா சானா கான் 30 ஓட்டங்களை எடுத்தார். இலங்கையின் பந்துவீச்சில் மூன்று வீராங்கனைகள் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
பலிக்காத நம்பிக்கை
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களையே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி தொடர்பில் பெரிதும் நம்பிக்கை வெளியிடப்பட்ட நிலையிலேயே அணி தோல்வியடைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam