வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம்: மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்

By Renuka Jul 17, 2023 04:39 AM GMT
Report

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

நுவரெலியாவின் லிந்துலவை சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான வீரன் சிவரஞ்சினி என்ற பெண்ணே இவ்வாறு சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவில் அவர் பணிபுரிந்த இடத்தில் உடலில் ஊசிகளைச் செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம்: மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல் | Sri Lankan Woman Who Worked In Saudi Was Tortured

சத்திரகிசிச்சை

மருத்துவ பரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியா மாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

காலில் இருந்த இரண்டு ஊசிகளை சத்திரகிசிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சிவரஞ்சினி கடந்த ஜூன் 17ஆம் திகதியன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம்  சவூதி அரேபியா சென்றுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே சவூதி அரேபியா செல்வதற்குத் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம்: மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல் | Sri Lankan Woman Who Worked In Saudi Was Tortured

பெரும்கொடுமைகளை அனுபவித்தேன்

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் சவூதி அரேபியாவில் அந்த வீட்டிற்குச் சென்ற முதல்நாளில் இருந்து என்னைத் துன்புறுத்தினார்கள். அவர்களுடைய மொழி எனக்கு தெரியாது.

நான் ஒரு வார காலம் அங்கு வேலை பார்த்தேன், பெரும் கொடுமைகளை அனுபவித்தேன், எனது பிள்ளைக்காக அவற்றைச் சகித்துக்கொண்டேன்.

கழிவறையைச் சுத்தம் செய்வதற்காக ஏணியில் ஏறியவேளை நான் கீழே விழுந்தேன், தலையில் அடிப்பட்டு மயக்கம் வந்தது.

இதன்போது என்னை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவிடுங்கள் நான் இலங்கைக்குச் செல்கின்றேன் என தெரிவித்தேன், ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து என்னை அடித்தார்கள்.

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணின் உடலில் ஊசி செலுத்தப்பட்ட கொடூரம்: மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல் | Sri Lankan Woman Who Worked In Saudi Was Tortured

பணிபுரியும் இலங்கை பெண்கள் 

அவர்கள் மூன்று வருடங்கள் வேலைபார்ப்பதற்குச் சம்மதம் என தெரிவிக்கும் கடிதத்தில் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற முயன்றனர், நான் மறுத்ததால் அவர்கள் கோபமடைந்து ஊசிகளால் எனது கை கால்களில் குத்தினர், நான் என்னைச் சித்திரவதை செய்யவேண்டாம் என கதறினேன், ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை என சிவரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இலங்கை பேரழிவிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கை பெண்கள் அந்நிய செலாவணிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

அவர்கள் அனுப்பும் மில்லியன் கணக்கான பணம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவுகின்றது.

எனினும் இவர்களில் பலருக்கு தங்கள் குடும்பத்தினருக்காகச் சிறந்த வாழ்க்கை என்ற கனவு மிகவும் பயங்கரமானதாக மாறிவிடுகின்றது.

அவர் நவீன கால அடிமைத்தனம் என தெரிவிக்கக்கூடிய சூழ்நிலைகளில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US