சர்வதேசத்தை நாடப்போவதாக இலங்கை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
இலங்கை ஐரோப்பியச் சந்தையில் எளிதில் நுழைவதற்கான வாய்ப்பை இழப்பதைத் தடுக்கும் திட்டத்தில தொழிலாளர்களின் உரிமைகளைப் புறக்கணிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மனித உரிமைகள் மீறல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது ஆகிய விடயங்கள் குறித்து மாத்திரமே ஐரோப்பிய நாடாளுமன்றம் நிபந்தனைகளை வகுத்துள்ளதாகத் தொழில் அமைச்சர் கூறிய நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதால் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை மீறுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிக்க நாட்டின் தொழிற்சங்கத் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அரசாங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் தொழிற்சங்கத் தலைமையின் முறைப்பாடு எதுவும் இன்றி தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. சுதந்திர வர்த்தக வலயங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை மேலும் வலுப்படுத்தவும், முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தரநிலைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி தொழிலாளர் உறவுகளுக்கான நடத்தை விதிகளைத் தயாரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து "எந்தவொரு பிரச்சினையும் எழுப்பப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ள தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா "தொழிலாளர் உரிமைகள் குறித்து எதுவும் பேசுவதற்கில்லை” எனவும் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலுக்கு வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கினார். தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், இலங்கை வணிகக் கப்பல் சங்கத்தின் தலைவர் பாலித அதுகோரல மற்றும் பிற வர்த்தக தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் அமைச்சரின் கருத்துக்களுக்குப் பதிலளித்த சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ள போதிலும், தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய விடயங்கள் நிவாரணம் கிடைக்காமை குறித்து, தொழிற்சங்கங்கள் எந்தவொரு முறைப்பாடும் செய்யாமையால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தற்போதைய விவாதங்களில் அவை வலியுறுத்தப்படவில்லை.
அமைச்சர்கள் இவ்வாறு வாதிட்டால், நிலைமையைச் சரிசெய்ய விரைந்து தாம் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகச் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் எச்சரித். எதிர்காலத்தில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று தொழிலாளர் தலைமை முன்மொழிந்துள்ளது.
"முதலாளிகள் அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படவில்லை என்றால், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதை இயக்குவதற்கும் உடனடியாக தலையிடுவதற்கான அதிகாரத்துடன் வெளி விவகார அமைச்சு முத்தரப்பு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். எங்கள் அனுபவம் என்னவென்றால், கடந்த முறை, 2017 இல், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை மீட்டெடுக்கப்பட்டபோது, இதேபோன்ற ஒரு குழு நியமிக்கப்பட்டு, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அது ஒன்றும் செய்யாத செயலற்ற குழுவாக மாறியது. ஏனெனில் செயலாளராக அவர் அமைச்சின் பணிகளைப் பாதுகாக்க வேண்டும். ஜி.எஸ்.பி பிளஸ் ஊடான தொழிலாளர்களுக்கான பிரதிபலன் குறித்த பொறுப்பை அவர்களுக்கு வழங்காமல், ஜி.எஸ்.பி பிளஸுக்கு பொறுப்பான வெளி விவகார அமைச்சிற்கு அதனை வழங்குமாறு நாம் கேட்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளி விவகார அமைச்சர், தினேஷ் குணவர்தன இந்த விடயம் குறித்து பின்னர் விவாதிக்கப்படுமென, அறிவித்ததாக, தொழிற்சங்கத் தலைவர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார். வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கத்தில் தலைவர் லீனஸ் ஜயதிலக, "இது முடிவற்ற அநீதி" என சுட்டிக்காட்டுகிறார்.
2017இல் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இழந்த ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீண்டும் பெறுவதற்கு, உதவிய தொழிற்சங்கங்களுக்குக் கிடைக்காத சலுகைகளை, முதலாளிகள் தொடர்ந்து அனுபவித்து வருவதாக, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.
“ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் இன்று தொழிலாளர் வர்க்கம் மிகவும் பலவீனமான அமைப்பு நிலையில் உள்ளது. மொத்த தொழிலாளர் வர்க்கத்தில் 7% மாத்திரமே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாம் பேசும் ஏற்றுமதி துறையில் உள்ள ஊழியர்களைப் பார்த்தால், 5% கூட ஒழுங்கமைக்கப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் நாம் ஜி.எஸ்.பி பிளஸ் போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாமா என முயற்சிக்க வேண்டும். எங்களுக்கு வலிமை இருந்தால், தொழிலாளர் வர்க்க அமைப்பு ரீதியாக வலுவாக இருந்தால், நாம் அவர்கள் பின்னால் போகவேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் சக்தியையும் பேரம் பேசுவதையும் காட்டுகிறார்கள்.
எனவே இந்த சூழ்நிலையில் இதுபோன்ற மொட்டை கருவிகளைப் பயன்படுத்த முடியுமா மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமா என்பதை நாம் பார்க்க வேண்டும், ”என அன்டன் மார்கஸ் கூறியுள்ளார். இணக்கம் தெரிவிக்கப்பட்ட மனித உரிமைக் கடமைகளை இலங்கை நிறைவேற்றவில்லை என்பதை நிரூபித்தால், தற்போதுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்த தீர்மானத்துடன் இணைந்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருடம் நவம்பரில் இலங்கையின் மனித உரிமை நிலைமையை மதிப்பாய்வு செய்யும். சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைக் கடமைகளைச் செயல்படுத்துவதையும் இது உள்ளடக்கியுள்ளது.
மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தால் செயல்படுத்தப்படாததால் பெப்ரவரி 2010 இல் முன்னுரிமை வரி சலுகையான (ஜிஎஸ்பி பிளஸ்) இடைநிறுத்தப்பட்டது, நல்லாட்சி அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளைச் செயற்படுத்துவது குறித்த உத்தரவாதத்திற்கு அமைய, நம்பிக்கையின் அடிப்படையில், 2017 மே மாதம் ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றது.
சீனாவுக்கு அடுத்ததாக ஐரோப்பா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும். ஐரோப்பா கடந்த வருடம் இலங்கையிலிருந்து 21 கோடி யூரோ பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
