பயிற்சி போட்டியில் தடுமாறும் இலங்கை அணி
இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி பயிற்சி போட்டியில், தடுமாற்ற நிலையில் விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் முன்னர் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இலங்கை விளையாடி வருகிறது.
இந்தப் பயிற்சிப் போட்டியானது நேற்று (14) வோர்கேஸ்டரில் ஆரம்பமாகியதோடு, போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் இங்கிலாந்து லயன்ஸ் அணி

அதன்படி துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் இங்கிலாந்து லயன்ஸின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தினை சந்தித்தனர். இதனால் களத்தடுப்பை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே தடுமாறிய இலங்கை வீரர்கள் 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
திமுத் கருணாரட்ன
இலங்கை சார்பில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை திமுத் கருணாரட்ன 26 ஓட்டங்களுடன் பதிவு செய்தார்.

மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான ஷமான் அக்தார் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் பெற்றுக்கொடுக்க, ஜோஸ் ஹல் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணியானது முதல் ஆட்ட நிறைவில் 145 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam