தமிழ் மக்கள் அழியும்போது சிரித்தவர்கள் ஒழிய வேண்டும்! ஆவேசமாக பேசிய கருணாநிதி
ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்து கொண்டிருந்தபோது, அதைக் கண்டு கைகொட்டிச் சிரித்த துரோகிகள் ஒட்டுமொத்தமாக ஒழிய வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பேரழிவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியவர்களும், மக்களின் மரணங்களில் அரசியல் இலாபம் தேடியவர்களும் மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.
தமிழ் இனம் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமானால், கடந்த காலங்களில் மக்களுக்கு துரோகம் இழைத்த சக்திகளை இனங்கண்டு அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,