பெற்ற மகளையே தேரருக்கு விற்ற தாய்! தேரருக்கு ஆதரவாக கூடியிருந்த 20 சட்டத்தரணிகள்
சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த பௌத்த பிக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையிலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார்.
இருப்பினும், தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த சட்டத்தரணியும் அல்லது வேறு எந்த வெளி தரப்பினரும் முன்னிலையாகவில்லை.
இவ்விடயம் பலர் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி! பின்னணியில் மறைந்துள்ள அரசியல் உத்தரவுகள்