பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி! பின்னணியில் மறைந்துள்ள அரசியல் உத்தரவுகள்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தொடர்பில் உயிரிழப்பதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி ஊடாக பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகம்
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது தற்கொலை செய்துக்கொள்வதற்கு ஒரு தரப்பினரால் தூண்டப்பட்டாரா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தொடர்பில் கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி ஊடாக பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் பெயரை குறிப்பெடுத்ததாக கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அரசியல் உத்தரவு
ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடிக்கின்றார்கள். காட்டுச்சட்டமே தற்போது நடைமுறையில் உள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் அரசியல் உத்தரவுகளுக்காக நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படுகின்றார்கள்.
நாட்டில் தற்போது சாட்சியாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், மர்மமான முறையில் உயிரிழப்பது தற்போது வழக்கமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan