கொழும்பில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

Sri Lanka Police Colombo Money
By Vethu May 16, 2026 04:50 AM GMT
Report

கொழும்பு, இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 120 வெளிநாட்டு சந்தேக நபர்கள், இலங்கையிலிருந்து கலிபோர்னியா மற்றும் சவூதி அரேபியாவின் வங்கி கணக்குகளை ஊடுருவியமை தெரியவந்துள்ளது.

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌஷல்ய முன்னிலையில் வெலிக்கடை பொலிஸார் நேற்று இந்த விபரங்களை சமர்ப்பித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 கணினிகளை, இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவிற்கு அனுப்பி நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

இணைய மோசடி

மேலும் கைப்பற்றப்பட்ட 151 கணினிகள், 51 மடிக்கணினிகள் மற்றும் 266 கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை இன்னும் நிறைவடையாததால் சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் | Foreigners Hacked Two Foreign Banks In Colombo

இதனை பரிசீலித்த மேலதிக நீதவான், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் விசா இன்றி தங்கியிருந்த 28 சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிப்பதற்காக, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணை

இராஜகிரிய, மத்திய வெலிக்கட வீதியில் அமைந்துள்ள ஏழு மாடி அடுக்குமாடி குடியிருப்பு வளாகமொன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இணையவழி நிதி மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்கள் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் | Foreigners Hacked Two Foreign Banks In Colombo

கடந்த 2ஆம் திகதி சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் கணினிகள் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இந்த 120 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த வெளிநாட்டு சந்தேக நபர்கள் Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US