சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பொரிஸாரால் கைது!
அம்பாறை மாவட்டம் - தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டொன்றின் குளியலறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை அம்பாறை ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்று(15.05.2026) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரியங்கரவுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபானம்
இந்த சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் ஆலை சில காலமாக தமன மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தயாரிக்கப்பட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது 3 இலட்சத்து 60 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 30 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உபகரணங்களும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி சிறுவர்கள் நெஞ்சில் பிரிவினை விசத்தை விதைக்கிறது....கம்மன்பில கிளப்பும் சர்ச்சை