சிங்கள தலைவர்களுக்கு தேவைப்படும் தமிழர்களின் உதவி : ரணிலின் இரகசிய நகர்வு அம்பலம்
தென்னிலங்கை அரசியல் பரப்பில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சுவீகரிக்க வேண்டிய தேவை சிங்கள அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று சமூக செயற்பாட்டாளர் சமூக ஆர்வலர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கில் - கிழக்கில் உள்ள அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் இன்றித் தான் இந்த அரசாங்கம் தனது ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக கடந்த வருடம் ரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமாக ஆட்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்று பின்னர் சுதந்திர தினத்திற்குள்ளாக தீர்வு வழங்குவதாக தெரிவித்து தமிழ் அரசியல் தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
