வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை: விரைந்து தீர்வு காண அமைச்சரவை உப குழு
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்காகவும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சரவை உப குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்தக் குழுவில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சரவைப் பத்திரம்

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணை, இலங்கையின் பல்வேறு தரப்பு மக்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்கும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மோதலின் பின்னர் காணி மற்றும் காணாமல் போனவர்கள முயல்வதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிய நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தநிலையல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரரவையின் தீர்மானத்தை இலங்கை
நிராகரித்துள்ளது,
அதேநேரம் நல்லிணக்கத்தை அடைவதற்காக தனது சொந்த, உள்நாட்டுப் பொறிமுறைகளை
மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.