ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்த இலங்கை தமிழர்
இலங்கை தமிழர் ஒருவர் பாக் ஜல சந்தி ஊடாக ஏழு கடல் மைல் தொலைவை
நீந்தி தமிழகம் தனுஷ்கோடியை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஹசன் கான் என்ற 24 வயதுடைய அஜய் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை நீந்தி வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னையும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தையும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு ஏற்றிச்சென்ற படகு ஒன்றின் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியபோது தாம் கடலில் குதித்ததாக அவர் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாரின் உதவியை நாடிய இந்திய பொலிஸார்
இந்த சம்பவம் அரிச்சல்முனைக்கு அருகிலுள்ள ஐந்தாவது தீவு அருகே இடம்பெற்றதாக கான் இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவருடன் படகில் சென்றதாக கூறப்படும் ஐந்து பேர் கொண்ட குடும்பம், மணல் திடல் ஒன்று நிர்க்கதியாக நின்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காப்பாற்றப்பட்டு மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் குறித்த இளைஞர் நீந்திக்கொண்டிருந்ததைக் கண்டு, கரையோர காவல்துறைக்கு அறிவித்த நிலையில் அவரைக் கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவரின் அடையாளத்தை சரிபார்க்க இந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாரின்
உதவியை நாடியுள்ளனர்.



