வடமாகாண ஆளுநரின் உரையை வரவேற்கும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
"பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் பொறுப்போடு மாணவர்களை வழிப்படுத்துகின்ற போதிலும் மாணவர்கள் சமூக பொறுப்பற்று செயற்படுவது வேதனைக்குரிய விடயம்" என்று வடக்கு மாகாண ஆளுநர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவிற்கு பிரதம அதிதியாக நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
அதிபர்களும், ஆசிரியர்களும் மிகவும் கஷ்டப்பட்டு மாணவர்களை வழிப்படுத்துகின்றார்கள் என்பதனை இப்பாடசாலையில் இன்று நடைபெற்ற அனைத்துச் செயற்பாடுகளும் சாட்சியாக அமைகின்றன.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்பு
மாணவர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மாணவர்களின் உயர்வான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பாடுபடுகின்றார்கள் என்பதை நான் காண்கின்றேன். ஆனால் மாணவர்கள் வழிமாறிச் செல்கின்ற போது அதிபர்கள், ஆசிரியர்கள் மனதில் விரக்தி ஏற்படுகின்றது.
இதனை பெற்றோரும் சமூகத்தில் உள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாறுதலானது மாணவர்களை சுற்றியுள்ள சமூகமும் அவர்கள் வாழும் சூழலுமே அவர்களை மாற்றுகின்றது.
ஆகையால் அனைவரும் சமூகப் பொறுப்போடு நடந்து கொண்டு வடக்கு மாகாணத்தை கல்வியிலும் பண்பாட்டிலும் உயர்ந்ததாகக் கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஆளுநரின் உரையை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளதுடன், அதிபர், ஆசிரியர்கள் உயர்வான எண்ணங்களுடன் கடமை ஆற்றுகின்றார்கள் என்பதனை வடமாகாண ஆளுநர் புரிந்து கொண்டது போல ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.





கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
