பயணிக்க முடியாத தண்டுவான் குளங்கீழ் வீதி: பாதிக்கப்படும் விவசாய மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் தண்டுவான். இது விவசாய பாரம்பரிய குடும்பங்களால் நிறைந்துள்ளது.
நாதான்குளம், தண்டுவான்குளம், பாவற்குளம் என பிரதான மூன்று குளங்கள் கொண்ட வளமான கிராமமாக இரு பார்க்கப்படுகின்றது.
இங்குள்ள பாவற்குள வீதி நீரோடி சேதமாகியுள்ளது.
பாவற்குளம் வீதி சேதம்
தண்டுவான் பாடசாலைக்கு முன்னாக அமைந்துள்ள குளம் பாவற்குளம் ஆகும். இது B296 பிரதான வீதியை கிழக்கெல்லையாகவும் மேற்கெல்லையாக கரடிப்புலவு கிராமத்தையும் வடக்கெல்லையாக குளக்கீழ் வீதியையும் கொண்டுள்ளது.
இந்த குளக்கீழ் வீதி தண்டுவான் கிராமத்தையும் பண்டாரிக்குளம் கிராமத்தையும் இணைக்கின்றது.
பிரதான வீதிகளான தண்ணீரூற்று - புளியங்குளம் வீதி(B296)யும் ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி (B334) யையும் இணைத்து பயணங்களை இலகுவாக்கி விடுகின்றது.
தொடர்ந்து பெய்து வந்த மழையினால் தண்ணீரூற்று புளியங்குளம் பிரதான வீதியுடன் பாவற்குள வீதி இணையும் இடத்திற்கு அண்மையில் பாலத்தின் கீழாக பாய்ந்தோடும் நீரினால் பாவற்குள வீதி அரிப்புக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. இது பயனிப்போருக்கு இடையூறாக அமைவதனை அவதானிக்கலாம்.
25m நீளமான பகுதி மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த பாதையை மாணவர்கள் மற்றும் விவசாய மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சேதமடைய காரணமென்ன?
நீண்ட காலமாக மீள் திருத்தமற்றிருக்கும் வீதியின் பாவற்குளம் வரையான பகுதி சுமார் 300m நீளமுடையதாகும்.
தண்டுவான் - பணடாரிக்குள வீதி 2km நீளமுடையதாகும். வீதியின் ஏனைய பகுதி செப்பனிடப்பட்டுள்ளமையும் இந்த சிறு பகுதி செப்பனிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தண்டுவான் பாடசாலைக்கு அண்மையாக பிரதான வீதியுடன் இணையும் பகுதியானது பிரதான வீதியின் குறுக்குப் பாலத்துக்கு அண்மையாக அமைந்துள்ளது.
பாலத்திற்கு கீழாக பாயும் நீர் அதிகமாகும் போது இந்த வீதியை மேவி பாய்ந்து வீதியை சேதமாக்குகின்றது. வீதியின் உயரம் அதிகமாகவும் பெரிய பாலத்து நீரினை அடுத்த பக்கம் மாற்றுவதற்கு இணைப்பு வீதியும் பாலத்தை கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் அந்த அமைப்பு முறை பேணப்படவில்லை.
இதனாலேயே இந்த வீதி அதிகம் சேதமாவதாக வீதி அபிவிருத்தி திட்டங்களை பெற்று செயற்படுத்தும் முதலீட்டாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
பிரதான வீதியின் பாலத்திலிருந்து பாயும் நீரினை கடத்துவதற்கு சீமெந்து சுவரொன்றினால் வீதியின் குளப்பக்கம் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் நீண்ட காலத்திற்கு வீதி சேதமடையாதிருக்கும் வண்ணம் பேணலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
வீதி அபிவிருத்திப் பணிகளை திட்டமிடுதல்
வீதிகள் காலத்திற்கு காலம் திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு தொடர்ச்சியான பராமரிப்பும் அவசியமாகின்றது.
திருத்தப்பணிகளை குறுகிய காலப்பகுதிகளில் மீண்டும் செய்யவேண்டும் என்பது பொருளாதார இழப்பை அதிகமாக்கி விடும்.
அபிவிருத்தி பணிகளை திட்டமிடும் போது நீண்டகாலம் நின்று நிலைக்கும்படியான திட்டமிடல்களை செய்து முன்னுரிமையளித்து பணிகளை செய்யும் போது இத்தகைய இடர்களை தவிர்கலாம் என துறைசார் அறிஞர்களுடனான வீதி அபிவிருத்தியும் மீள் செப்பனிடலும் சார்பாக உரையாடிய வேளை கருத்துக்களை முன்வைத்தனர்.
இத்தகைய சுட்டிக்காட்டல்கள் எதிர்வரும் காலங்களில் கருத்திலெடுக்கப்பட்டால் மகிழ்ச்சியை எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது உறுதி.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
