கரைதுறைப்பற்று பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய வியூகம் (Video)
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்ப்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றை நாடியும் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இதற்கான மாற்று வியூகம் ஒன்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமைத்து அது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியில் தராசு சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளதுடன் கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்து இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் முன்னாள் வடமாகாண
சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றவூவ் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
