ஜெர்மனியில் கோர விபத்து - இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி
ஜெர்மனியில்(Germany) ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை(Sri lanka) பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன
கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதசாரி கடவை
இலங்கையை சேர்ந்த பெற்றோரின் பிள்ளையான அவர் பாடசாலைக்கு செல்லும் வேளையில் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சம்பவ தினத்தன்று லிவர்குஸ்ன்-ஓப்லேடன் பகுதியில் உள்ள சுற்றுவட்ட பாதைக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதசாரி கடவையைக் கடந்து சென்று கொண்டிருந்த போது டெலிகாம் வேன் வேகமாக வந்து அந்தச் சிறுமியின் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் உடனடியாக வைத்தியாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
You May Like This
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam