நடைமுறைக்கு வரவுள்ள அநுரவின் திட்டம்..!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayaka) முன்வைத்துள்ள 'GovPay' டிஜிட்டல் சேவை, எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
டிஜிட்டல் சேவை..
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அந்த வகையில், இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் தளம் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்.
மேலும், அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் விதத்தை நெறிப்படுத்தி நவீனப்படுத்தும் என்று ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்னும் சில வருடங்களுக்குள் நாட்டில் பல அரச சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என நேற்று குருநாகலில் வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.
எனவே, இனிவரும் காலங்களில், GovPay டிஜிட்டல் சேவை உள்ளிட்ட ஏனைய சேவைகளிலும் பணம் செலுத்துதல், பெறல், ஆவண சேகரிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
