லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
தென் கிழக்கு லண்டனின் பெக்ஸ்லிஹீத் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.
கடந்த 18ஆம் திகதி இரவு 08.30 மணியளவில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்ற வீடு ஒன்றில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தீ விபத்தில் உயிர் தப்புவதற்கு இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்தவரின் நிலைமை தொடர்பிலும், விசாரணையின் பின்னரான முதற்கட்ட தகவல்கள் தொடர்பிலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கீழே குதித்த போது ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனினும் அவர் இன்னமும் சிகிச்சைக்குட்படுத்தும் கட்டத்திலேயே உள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் வருத்தங்கள் அனைத்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் உறவினர்கள் மீதே உள்ளது. இந்த குடும்பத்தினர் மோசமான மற்றும் பேரழிவு தரும் இழப்பை சந்தித்துள்ளனர்” என தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் ட்ரெவர் லாவ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அயலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரமான சம்பவத்திற்கான காரணத்தை முழுமையாக அறிந்துக் கொள்ள லண்டன் தீயணைப்பு படையிலுள்ள சக ஊழியர்களுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளில் தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியது என்று நாங்கள் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
லண்டனில் கோர சம்பவம் - இலங்கை தமிழ் குடும்பம் உயிரிழப்பு
You My Like This Video