அவுஸ்திரேலியாவில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதியினருக்கு ஏற்பட்ட சிக்கல்
அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் வேவர்லி பகுதியை சேர்ந்தவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட குமுதினி கண்ணன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக வீட்டில் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தம்பதியினர் மீது 2016ம் ஆண்டு அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னர் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது எனவும் குமுதினி மிரட்டியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் வேறுவொரு வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இந்த வழக்கில் குமுதினிக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |