இலங்கை கிரி்கெட் வீராங்கணைக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்
மகளிர் பிக் பாஷ் போட்டி ஒன்றில் இலங்கையின் சமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என சிட்னி தண்டர் அணியின் தலைவர் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
சிட்னி தண்டர் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதப்பத்து விளையாடி வருகிறார்.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு
அவரது அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், சமரி அதப்பத்து துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சிட்னி தண்டர் அணியின் தலைவர் ஆண்ட்ரூ கில்கிறிஸ்ட், 26ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் சமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இந்த தொடரில் சமரி அதப்பத்து சிட்னி தண்டர் அணிக்கு களத்திலும், வெளியிலும் பெரும் பங்கு வகித்துள்ளார்.
அவர் தனது கலாச்சாரத்தை தனது அணியினருடன் மிகவும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
26ஆம் திகதி நடைபெறும் சிட்னி சிக்ஸர்ஸ் போட்டியில் சிறப்பாக பங்கேற்கவும், மேற்கு சிட்னியைச் சுற்றியுள்ள ரசிகர்களை ஊக்குவிக்கவும், சமரியின் பெயரில் ஒரு இருக்கை வரிசையை அர்ப்பணிக்கிறோம் எனக் கூறுவதில் பெருமைப்படுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri