தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை
அனுராதபுரத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று(18.11.2023) இரவு 7.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார என்ற 27 வயது இளைஞரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரிகள் தப்பியோட்டம்
உயிரிழந்த இளைஞர் தனது வீட்ற்கு வெளிப்புறம் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
சூட்டுக் காயங்களுக்குள்ளன இளைஞர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தலாவை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பண தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், கொலைச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam