ஜேர்மனியில் மதுபோதையில் கப்பல் ஓட்டிய பெண்: விபத்தில் 1.5 மில்லியன் யூரோ இழப்பு
ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று ரைன் நதி வழியாக சென்றுள்ளது.
அசாதாரண விபத்து
இந்நிலையில் கப்பல் தளபதிக்கு பதிலாக துணை தளபதியாக இருந்த பெண் ஒருவர் அந்த கப்பலை செலுத்தியுள்ளார். அவர் மது போதையில் இருந்ததால், Iffezheim என்னும் பகுதியில், நீர்மின் நிலையத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பில் வேகமாக சென்று கப்பலை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பல் மோதிய வேகத்தில் நீர்மின் நிலையத்துக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு உடைந்துள்ளது. தனிப்பட்ட முறையில் அதை தயாரித்து மீண்டும் நதியில் அதை அமைக்க ஒரு வருடம் ஆகும் என கூறப்படுகிறது.
பொலிஸார் இது ஒரு அசாதாரண விபத்து என்றும், இதுவரை நதியில் தாங்கள் இது போன்றதொரு விபத்தைக் கண்டதில்லை என்றும் கூறுகிறார்கள். விபத்து நடந்த நேரத்தில், நதியின் எதிர் பகுதியில் வேறொரு கப்பலும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
